பக்கம்:அறப்போர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


ஆதலின் பகையரசனுடைய நாட்டில் உள்ள அந்த வகையினரைப் பாதுகாக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகப் பசுக்களைக் காக்க வேண்டும். இதற்காகப் பகை நாட்டார் தெரிந்து கொள்ளும் வண்ணம் தாம் போர் செய்யப் போவதை வெளிப்படையாகத் தெரிவித்து விடுவார்கள்.

‘பசுக்களும், பசுவை யொத்த அந்தணர்களும், பெண்களும், நோயாளிகளும், பிதுர் கர்மங்களைச் செய்தற்குரிய மக்களைப் பெரறாதவர்களும் தங்களுக்குப் பாதுகாப்பான இடத்தைத் தேடி அடைந்து விடுங்கள். நாம் போரிடப் போகிறோம்’ என்று முரசு அறையச் செய்வார்கள். இந்தச் செய்தியைக் கேட்டவர்கள் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வார்கள். இதை உணர்ந்து தமக்குரிய பாதுகாப்பைச் செய்வதற்குரிய அறிவில்லாத பசுமாடுகள் இருக்கின்றனவே, போரிடத் துணிந்த அரசன் அவற்றை வழி மடக்கித் தன் ஊருக்குக் கொண்டு வந்து பாதுகாப்பான். இது போர் முழக்கம் செய்யும்போதே நிகழும் நிகழ்ச்சி. இப்படிப் பகைவருடைய ஆகிரையைக் கொண்டு வருவது வெட்சித்திணையென்ப தன்பாற்படும். புறப்பொருளில் முதல் திணை இது. வெட்சித் திணையே, போர் செய்தாலும்

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/41&oldid=1267414" இலிருந்து மீள்விக்கப்பட்டது