பக்கம்:அறப்போர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


அதிலும் அன்பும் அறமும் இடம் பெறும் என்பதைக் காட்டுவதற்கு அறிகுறியாககிற்கிறது. உலகியலில் நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் அதுவே எம்முடைய குறிக்கோள் என்று, அதை மக்கள் மறவாத வண்ணம் இலக்கண நூல் வற்புறுத்துகிறது. நூல்களில் இந்த வரையறையைக் கடைப்பிடித்துப் புலவர்கள் இலக்கிய உலகில் இதை நிகழ்த்தட்டும் என்று இலக்கண நூலார் இத்தகைய பேரறங்களை -யுத்த தர்மங்களைச் சொல்லி வைத்தார்கள்.

‘இருபெரு வேந்தர் பொருவது கருதியக் கால் ஒருவர், ஒருவர் நாட்டு வாழும் அந்தணரும் ஆவும் முதலியன தீங்கு செய்யத் தகாத சாதிகளை ஆண்டு நின்றும் அகற்றல் வேண்டிப் போதருக எனப் புகறலும், அங்ஙனம் போகருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினால் தாமே கொண்டுவந்து பாதுகாத்தலும் தீதெனப்படாது அறமேயாம்’ என்றும், ‘மன்ணுயிர் காக்கும் அன்புடை வேந்தற்கு மறக்துறையினும் அறமே நிகழும்’ என்றும் நச்சி ஆர்க்கினியர் (தொல். புறத்தினே. 2, உரை) எழுதுகிறார். திருவள்ளுவர் மறத்துறையிலும் இத்தகைய அன்புச் செயல்கள் இருத்தலே எண்ணியே,

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/42&oldid=1267415" இலிருந்து மீள்விக்கப்பட்டது