பக்கம்:அறப்போர்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்அறத்திற்கே அன்புசார் பென்ப் அறியார்
மறத்திற்கும் அஃதே துணே.

என்று கூறினார்.

பகைகொண்ட அரசனிடத்தும் அவனைச் சார்ந்து போர் செய்யும் வீரர்களிடத்தும் சினத்தைக் காட்டும் மன்னன் மற்றவர்களிடம் அன்பு காட்டுவது மறத்திடையே தோற்றிய அறம். ஆநிரைகளைப் பகைவர் நாட்டினின் ஆறும் மீட்டுவரும் மரபு தமிழ் நாட்டில் இலக்கிய இலக்கணங்களால் வெளியாகிறது. “சண்டைக்கு எடுபிடி மாடுபிடி” என்ற பழமொழிகடட இந்த அறத்தைச் சுட்டிக்காட்டுகிறது. பழமொழி யாக வழங்குமளவுக்கு இந்தச் செயல் தமிழ் நாட்டில் ஊன்றியிருக்கிறது. பாரதத்தில் விாடபர்வத்தில் துரியோதனாயர் விராட தேசத்து மாடுகளைக் கவர்ந்து வர, அவரெதிர் சென்று அருச்சுனன் அவற்றை மீட்டான் என்ற வரலாறு வருகிறது. தமிழ் இலக்கணத்தில் மிகப் பழமையானது தொல்காப்பியம். அதில் ஆநிரை கவரும் வெட்சிக்கு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணம் தொல்காப்பியர் புதியதாகப் படைத்தது அல்ல. அதற்கும் முன்பே இருந்த நூல்களில் உள்ள்வற்றை அடியொற்றியே அந்த இலக்கணத்தை அவர் வகுத்தார். ஆகவே, பழங்காலத்திலேயே

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/43&oldid=1267417" இருந்து மீள்விக்கப்பட்டது