பக்கம்:அறப்போர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


ஆநிரை கொள்வது தமிழ் நாட்டில் மரபாக இருக்கிறதென்று கொள்ளலாம். இந்த மரபை உணர்ந்த மன்னர்கள், பாரதப் போர் தொடங்கும் முன்னர், இந்தத் தமிழ் நாட்டு மரபு நல்லதென எண்ணித் தாமும் மேற்கொண்டார்கள் என்றே தோன்றுகிறது.

இத்தகைய அறப்போரைச் செய்த தமிழ் நாட்டு மன்னர்களில் பாண்டியன் பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ஒருவன். அவன் முடியுடை மூவேந்தர்களில் ஒருவராகிய பாண்டியர் குலத்தில் வந்தவன். பல யாகங்களைச் செய்வித்தவன். அவனுடைய தலைநகரில் உள்ள மதிலை அழிக்கும் ஆற்றல் எந்தப் பகையாசரனுக்கும் இல்லை. அந்த மதிலிலுள்ள சிகரங்களாகிய குடுமிகள் பல காலமாக வண்ணங் கெடாமல் முதுகுடுமிகளாகவே இருந்தன. அவனுக்கு அமைந்த பெயரே இத்தனை சிறப்புக்களையும் தெரிவிக்கின்றது. இவ்வளவு நீளமான பெயரை உடையவனானாலும் புலவர்கள் சுருக்கமாகக் குடுமி என்றும் அழைப்பார்கள்; பாட்டில் வைத்துப் பாடுவார்கள்.

அப்படிப் பாடியவர்களில் நெட்டிமையார் என்ற புலவர் ஒருவர். மிகப் பெரியவர்களையும் மிகச் சிறியவர்களையும் அவர்களுக்குரிய சொந்-

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/44&oldid=1267418" இலிருந்து மீள்விக்கப்பட்டது