பக்கம்:அறப்போர்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


றவர்கள். அவர்கள். ஆகவே ஆவை நினைத்தவுடன் ஆனின் இயல்புடைய பார்ப்பன மாக்களை நினைத்தான். அவரை அடுத்துப் பாதுகாப்புக்குரியவர்கள் மகளிர்; போர் புரிவதற்குப் பயன்படாதவர்கள். அவர்களையும் நினைத்தான்.

மற்ற மக்களிலும் சிலரைப் போரில் ஈடுபடுத்துவது தவறு. பிணியுடையவர்களைப் போரிலே புகுத்தக்கூடாது. போர்க்களத்தில் நோயுடையவர்கள் வந்தாலும் அறப்போர் முறையில் அவர்களோடு பொருதல் தகாது. பிணியின்றி இருப்பவர்களாயினும் புதல்வர் இல்லாதாரையும் போரில் அழித்தல் தவறு. புதல்வர் இருந்தால் அவர்களுடைய கால்வழி இடையறாது உலகில் நிலைபெறும். தாம் இறந்த பின்பும் பிதிரர்களை நோக்கிச் செய்யும் அருங்கடன்களை அவர்கள் புரிவார்கள். புதல்வர்கள் பொன் போன்றவர்கள். தளர்ச்சியுற்ற காலத்தில் துணையாவதோடு, இறந்த பிறகும் நன்மை தரும் கடன்களைச் செய்தலின் அவர்கள் பொருளைப் போன்றவர்கள். பின்னால் தளர்ந்த காலத்தில் உதவுவதற்காகப் பொருளைச் சேமித்து வைப்பார்கள். அதற்கு எய்ப்பில் வைப்பு என்று பெயர். புதல்வர்கள் எய்ப்பில் வைப்புப் போன்றவர்களே. அதனால்தான்,

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/48&oldid=1267422" இருந்து மீள்விக்கப்பட்டது