உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறப்போர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


தம்பொருள் என்பதம் மக்கள்

என்று திருவள்ளுவர் கூறினார். பொருள் என்றே பிள்ளைக்கு ஒரு பெயர் உண்டு. பொன் போன்ற புதல்வர்களைத் தென்புலத்தில் வாழும் பிதிரர்களுக்கு அருங்கடனை இறுப்பதன் பொருட்டுப் பெறாதவர்களும் போரில் விலக்குதற்குரியவர்கள். இவர்களெல்லாம் கேட்கும்படி, "எம்முடைய அம்பைக் கடிதிலே விடுவோம். நீங்கள் உங்களுக்கு அரணாக உள்ள இடங்களைத் தேடி அடையுங்கள்” என்று முதுகுடுமி நுவலுவானாம். இது சிறந்த அறத்தாறு அல்லவா? போர் செய்யப்புகும் போதும் இந்த அறநெறியை மேற்கொள்ளும் விரதம் உடையவன் அவன்.

அறநெறி யென்று சொல்லி, போர் வந்தால் கோழையாகி நிற்போரும் உண்டு. முதுகுடுமிப் பெருவழுதி அறநெறி வழி ஒழுகுபவன். போர் செய்யும் வீரமும் உடையவன்; மறக்கலையில் மாட்சி பெற்றவன்.

அவன் போர் செய்யப் புகுவானானால் அவனுடைய படையின் பெருமை அப்போது தான் புலப்படும். படையிலே சிறப்பான பகுதி யானைப் படை. யானை ஒன்று ஆனாலும் பத்து ஆளுக்கு ஒப்பானது. “யானையுடைய படை” என்று சிறப்பாகச் சொல்வார்கள். யானைகள்

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/49&oldid=1267424" இலிருந்து மீள்விக்கப்பட்டது