பக்கம்:அறப்போர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


இருந்த நதிகள் வையையும் பொருநையும். நெட்டிமையார் அந்த ஆறுகளைக் குறிப்பிடவில்லை. புலவர்கள் யாரேனும் ஒரு மன்னனைப் பாடும்போது அவர்களுடைய முன்னோரின் புகழையும் இணைத்துப் பாடுவது வழக்கம். முதுகுடுமியை வாழ்த்தும்போது அவனுடைய முன்னோன் ஒருவனையும் பாராட்ட நினைந்தார் புலவர். குடுமியின் வாழ்நாள் பல்குக என்பதற்கு ஏற்ற உவமையும், அவன் முன்னோன் ஒருவனுடைய சிறப்பும் ஆகிய இரண்டையும் ஒருங்கே அமைக்கும் நயமான வாய்ப்பு இந்தப் புலவருக்குக் கிடைத்தது.

*

மிகப் பழங்காலத்தில் பாண்டிநாடு இப்போது உள்ளதைவிட அதிகப் பரப்பை உடையதாக இருந்தது. குமரித் துறைக்கும் தெற்கே பல காவதங்கள் தமிழ்நாடு விரிந்திருந்தது. அந்தப் பகுதியில் ஆறுகளும் மலைகளும் இருந்தன. குமரிமலை, குமரி ஆறு, பஃறுளி யாறு என்பன அப்பகுதிகளில் இருந்தன என்று தெரிகிறது. அந்தப் பழங்காலத்தில் தெற்கே மதுரை என்ற நகர் இருந்தது. அதைப் பாண்டிய மன்னர்கள் தம்முடைய தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். அக்காலத்தில் கடல்கோள் ஒன்று நிகழ்ந்தது.

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/52&oldid=1265858" இலிருந்து மீள்விக்கப்பட்டது