பக்கம்:அறப்போர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


தமிழ் நாட்டின் தென் முனையில் ஒரு பகுதியைக் கடல் விழுங்கியது. மதுரை மறைந்தது.

பாண்டிய மன்னர் தம் தலைநகரை வடக்கே தள்ளி வைத்துக் கொண்டார்கள். மதுரை தலைநகராக இருந்த காலத்தில் பாண்டியர்கள் அங்கே ஒரு தமிழ்ச் சங்கத்தை வைத்து வளர்த்து வந்தார்கள். அதைத் தலைச் சங்கம் என்று சொல்வார்கள். மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரம் என்ற நகரம் பாண்டியர்களின் இராசதானியாயிற்று.அங்கும் தமிழ்ச் சங்கத்தை அவர்கள் கடத்திவந்தார்கள். அதற்கு இடைச்சங்கம் என்று பெயர்.

கபாடபுரத்திற்குத் தெற்கே உள்ள பகுதியை வேற்றரசர் சிலர் கைப்பற்றினர். கடல் கோள் நிகழ்ந்தமையால் தளர்வுற்ற பாண்டியர்களின் சோர்வு கண்டு வேற்றரசர் இவ்வாறு செய்தனர். பாண்டியன் மாகீர்த்தி என்ற அரசன் முடிசூடினான். அவன் வீரமும் புலமையும் நிரம்பியவன். தன் பகைவரை வென்று அவர் பெற்றிருந்த நிலத்தையும் தன்னுடைய தாக்கிக் கொள்ளவேண்டுமென்று உறுதி பூண்டான். பகைவர்மேற்படையெடுத்துச் சென்று தென்கோடி வரை போய்த் தென் கடற்கரையளவும் தன் ஆணையைச் செலுத்த வேண்டும் என்பது அவன் நினைவு.

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/53&oldid=1265859" இலிருந்து மீள்விக்கப்பட்டது