பக்கம்:அறப்போர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


போர்க்கோலம் பூண்டு புறப்பட்டான். புறப்பட்டபொழுது அவன் ஒரு வஞ்சினம் இயம்பினான். "நான் கடலளவும் சென்று, அந்தக் கடல்வடிம்பிலே நின்று என் கால்களை அந்தக் கடலின் நீராலே அலம்பிக் கொண்டாலன்றி மீளேன்!" என்று நெடுமொழி கூறினான். படையெடுத்துச் சென்று குறும்புகளை அடக்கித் தென் கடலுக்குச் சென்றான். அங்கே கடலோரத்தில் வடிம்பு அலம்பகின்றான். அன்று அவனுக்கும் பிற மக்களுக்கும் உண்டான மகிழ்ச்சி எல்லை காணாதபடி இருந்தது. அன்று முதல் அந்த மன்னனுக்குக் கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்ற பெயர் உண்டாயிற்று. பகைவர்பால் இருந்த நிலத்தை மீட்டுக் கொண்டமையால் நிலந்தரு திருவிற் பாண்டியன் என்ற பெயரும் அவனுக்கு அமைந்தது. உருவாலும் புகழாலும் உயர்ந்து நின்றமையால் அவனை நெடியோன் என்று புலவர் புகழ்ந்தனர். அவன் காலத்தில் பஃறுளியாறு என்ற ஆறு பாண்டிநாட்டில் ஓடியது.

அவன் காலத்தில் இடைச்சங்கத்தில் கொல்காப்பியர் ஒரு புலவராக இருந்தார். அவர் தொல்காப்பியம் என்ற அரிய இலக்கணத்தை இயற்றி நிலங்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேற்றினார்.

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/54&oldid=1265860" இலிருந்து மீள்விக்கப்பட்டது