பக்கம்:அறப்போர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


தில் பலர் உதித்தாலும் ரகு என்ற மன்னன் சிறந்தவகை இருந்தான். அதனால் ரகுகுலம் என்ற பெயர் இராமன் பிறந்த குலத்துக்கு ஏற்பட்டது. அப்படி முதுகுடுமிப் பெருவழுதியாகிய பாண்டியனுக்கு முன்னோர்கள் பலர் இருந்தும் புலவர் வடிம்பலம்ப நின்ற பாண்டியனை நினைத்தார். பாண்டிய குலத்தினருக்குத் தலைவன் என்று அவனைச் சொல்கிறார், “தம் கோ” என்று சிறப்பிக்கிறார். அந்த மன்னனுடைய வீரத்தை அவன் பெயரே காட்டும். அவன் கலைஞர்களிடத்தில் பேரன்புடையவன். புலவர், பாணர், கூத்தர் ஆகியவர்களுக்கு நிதி மிக வழங்கும் வள்ளல். செம்பொன்னையும் பசும் பொன்னையும் கூத்தருக்கு வாரி வாரி ஈயும் வண்மையுடையவன். தென் கடலைக் தன தாக்கிக்கொண்டு அந்த நன்னாளில் அங்கே பெருவிழாச் செய்தவன். முந்நீராகிய கடலின் கரையிலே வடிம்பலம்ப நின்றவன்; முந்நீர் விழ, வினையுடைய நெடியோன்.

படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளை உடைமையால் முந்நீர் என்ற பெயர் கடலுக்கு வந்தது. நீர் என்பது இயல்பைக் குறிக்கும் சொல். ஆற்று நீர், ஊற்று நீர், வேற்று நீர் என்ற மூன்று நீர்களும் சேர்ந்து அமைந்தமையால் அவ்வாறு பெயர்

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/56&oldid=1267429" இலிருந்து மீள்விக்கப்பட்டது