பக்கம்:அறப்போர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


கும். கடி.விரைவில். விடுதும்-எய்வோம். அரண்-காப்பாக உள்ள இடம். சேர்மின்-அடையுங்கள். அறத்தாறு-அற நெறியிலே. பூட்கை-கொள்கை. மறம்-வீரம். மீமிசை- மேலே. நிழற்றும்-நிழல் செய்யும். கோ-அரசன். செந்நீர் என்றது கலப்பற்ற தன்மையைக் காட்டியது; பசும்பொன் என்றது பொன்னின் வகையைக் காட்டியது. பசும்பொன்-கிளிச்சிறை என்னும் பொன். வயிரியர்-கூத்தர். ஈத்த-வழங்கிய. முந்நீர் விழவு-கடல் விழா; கடல் தெய்வத்திற்கு எடுத்த விழா என்று பழைய உரையாசிரியர் எழுதுகிறார்.

இச் செய்யுள் புறத்திணைகளில் ஒன்றாகிய பாடாண்திணையில் இயன்மொழி என்னும் துறையைச் சார்ந்தது. பாண்டிய மன்னனுடைய இயல்பை முன்னாலே கூறியமையால் இயன் மொழி ஆயிற்று. இது புறநானூற்றில் ஒன்பதாவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/59&oldid=1460090" இலிருந்து மீள்விக்கப்பட்டது