பக்கம்:அறப்போர்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெற்ற பரிசில்


சேரமான் பாலைபாடிய பெருங் கடுங்கோ என்னும் அரசன் பாலேத்திணேயைப் பாடுவதில் வல்லவன். அதனால்தான் ‘பாலேபாடிய’ என்ற அடை அவன் பெயரோடு அமைந்தது. அவனைப் பல புலவர்கள் பாராட்டிப் பாடியிருக்கிறார்கள். பேய்மகள் இளஎயினி என்ற பெண் புலவர் பாடிய பாட்டு ஒன்றில் அவனுடைய வீரமும் ஈகையும் ஒருங்கே புலப்படுகின்றன.

எயினி என்பது வேட்டுவக் குலப் பெண்ணின் பெயர். இளஎயினி என்பது எயினி என்பவளுடைய தங்கை என்பதைக் குறிக்கும். எயினியை யாவரும் அறிவாராதலின் அவளுக்குத் தங்கை என்று சுட்டிக் கூறினர். எயினிக்கும் இளவெயினிக்கும் தாய், பேய் என்னும் பெயரையுடைய பெருமாட்டி இன்னாருடைய மகனார் என்று ஆண் புலவரைக் கூறுவது வழக்கு மதுரைக் கணக்காயனர் மகனார் நக்கீரனார் என்று நக்கீரரைக் குறிப்பார்கள். அப்படியே பெண் புலவரைக் குறிப்பிடும்போது இன்னாருடைய மகளார் என்று அவருடைய தாயின் பெயரையும் சார்த்திச் சொல்வது வழக்கம் போலும். சேரமான் பாலைபாடிய பெருங் கடுங்கோவைப் பாடின பெண் புலவர் பேய் என்பவளுக்கு மகளார்; எயினி என்பவளுக்குத் தங்கையார்.

43
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/61&oldid=1267431" இருந்து மீள்விக்கப்பட்டது