பக்கம்:அறப்போர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


பேய் என்றும் பூதம் என்றும் வரும் பெயர்களை ஆணும் பெண்ணும் வைத்துக் கொள்வது பழங்கால வழக்கமென்று தெரிகிறது. பேயனார், பூதனார் என்ற பெயர்களைப் பழைய நூல்களிலே காணலாம். பேயாழ்வார் பூதத்தாழ்வார் என முதலாழ்வார்களில் இருவர் அப் பெயர்களை உடையவர்கள். ஆதலின் பேய் மகள் என்பது பேயென்னும் பெயரையுடைய தந்தைக்கு மகள் என்றுகூடக் கொள்ளலாம். பேய் மகள் என்பதற்குத் தேவராட்டி அல்லது பூசாரிச்சி என்று ஸ்ரீமத் மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் பொருள் எழுதியிருக்கிருரர்கள். * பேயாக இருக்க ஒருத்தி பெண்ணாக வடிவு கொண்டு பாடினுள் என்றும் சிலர் முன் காலத்தில் எண்ணியிருந்தார்கள். +

இனி, பேய்மகள் இளளஎனியின் பாட்டைப் பார்ப்போம்.

சேரமானுடைய தலைநகரம் வஞ்சி. அதன் புகழ் விண்ணளவும் ஓங்கியிருப்பதாம். அந்த நகரத்தில் நிகழும் காட்சி ஒன்றை நமக்குக் காட்டுகிறார் புலவர்.


  • ‘பேய்மகள்’ - தேவராட்டி; பூசாரிச்சி; பேயினது ஆவேசம் உற்றவள். இந்த வகையார் இக்காலத்தும் அங்கங்கே உள்ளார். புறநானூறு, பாடினோர் வரலாறு.

+ புறநானூறு, 11, உரை,

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/62&oldid=1267432" இலிருந்து மீள்விக்கப்பட்டது