பக்கம்:அறப்போர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெற்ற பரிசு



வஞ்சிமா நகரத்துச் சிறு பெண்கள் துள்ளிக் குதித்து விளையாடுகிறார்கள். மணலிலே சிறு வீடு கட்டி விளையாடுகிறார்கள். வஞ்சிமா நகருக்கு அணி செய்கின்ற பொருநை நதிக் கரையில் உள்ள மணற் பரப்பிலே சிறுசிறு பாவை போல வகுத்து அதைத் தம் குழந்தையென்று பாராட்டிச் சீராட்டுகிருறார்கள். அந்தப் பேதைப் பருவப் பெண்கள் எத்தனே அழகாக இருக்கிருறார்கள்! இயற்கையெழிலும் செயற்கை யெழிலும் அவர்களிடம் நிரம்பியிருக்கின்றன.

மணலிலே வீடு கட்டுகிறார்கள். அதன் நடுவே பாவை போல அமைக்கிறார்கள். அதற்கு அலங்காரம் செய்யவேண்டாமா ? ஆற்றங்கரையில் மலர் மரங்கள் பல வளர்ந்திருக்கின்றன. அந்த மரத்தின் கொம்புகளை வளைத்துப் பூவைப் பறிக்கிறார்கள். கையை நீட்டி மலரைக் கொய்யும்போது அந்த முன்னங்கையின் அழகு கன்முகத் தெரிகிறது. அந்தப் பெண்களின் உடல் வளப்பத்தையும் தேக வளர்ச்சியையும் அது காட்டுகிறது. மிக மெல்லிதாகிய உரோமம் நெருங்கிப் பார்த்தால் தெரியும்படி உள்ள கை; திரண்ட முன்கை. அவர்கள் தம் உடம்பில் தூய பொன்னால் ஆகிய இழைகளே அணிந்திருக்கிறார்கள். எவ்விடத்தும் சென்று ஓடியாடி விளையாடும் பேதைப்

45
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/63&oldid=1265869" இலிருந்து மீள்விக்கப்பட்டது