பக்கம்:அறப்போர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெற்ற பரிசு


புகழை உடையது; வெற்றியை உடையது; விண்பொரு புகழ் விறல் வஞ்சி.

அரிமயிர்த் திரள் முன்கை
வால் இழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
தண்பொருநைப் புனல்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சி.

இந்த அழகான விறல் வஞ்சிக்கு அரசன் பெருங்கடுங்கோ. அவனைப் புலவர் பலர் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். வெற்றி மேம் பாடுடையவனதலால் புலவர்கள் அவனைப் பல படியாகப் பாடியிருக்கிறார்கள். பாடல் சான்ற விறலேயுடைய அவ்வேந்தன் போர் செய்து பகைவரைப் புறங்கண்ட பெருமையைப் புலவர் சொல்கிறார்,

'அணிமையில்தான் சேரமான் ஒரு பெரிய போரில் வெற்றி பெற்று வந்திருக்கிறான். அதை அறிந்தே பேய்மகள் இளஎயினியார் அவனைப் பாராட்டிப் பாட வந்தார். காட்டரண், நாட்டரண், மலையரண் என்று சொல்லும் அரண்களால் தம்முடைய நகரங்களைப் பகைவர் அணுகுவதற்கு அரியனவாக அமைத்திருங் தார்கள் பகைவர்கள். நாட்டுக் குடிகளுக்குப்

47
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/65&oldid=1265871" இலிருந்து மீள்விக்கப்பட்டது