பக்கம்:அறப்போர்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெற்ற பரிசில்


அந்த இரண்டு வகைக்கும் எல்லையுண்டு. சங்கிலி ஒற்றைவடம் இரண்டு பவுனால் செய்யலாம்; நாலுவடம் பன்னிரண்டு பவுனால் செய்யலாம்' என்று நகையின் குறைவான அளவையும் அதிகமான அளவையும் குறித்துப் பேசுவது இக்காலத்தும் உண்டு. தலையளவு ஒன்று உண்டல்லவா? இத்தனை கழஞ்சுக்கு மேல் போனல் இந்த நகை அழகாயிராது. என்று சொல்லும் வரையறையே அந்தத் தலையளவு. இங்கே. விறலிக்குக் கிடைத்த நகை எத்தனே கனமாகச் செய்யலாமோ, அத்தனே கனமாகச் செய்தது; தலையளவை உடையது; அதிகப்படியான கழஞ்சுப் பொன்னல் அமைந்தது. விழுப்பமான கழஞ்சினால் செய்த இழை, கனமான - சீருடைய இழை (சீர்-கனம்), அழகான பொன்னால் செய்த இழை அது. அதை விறலி பெற்ருள்.

விறலி யென்பவள் ஆடலாலும் பாடலாலும் பிறரை உவப்பிக்கும் கலைத் திறமை உடையவள்; பாண்சாதியிலே பிறந்தவள்; பாணனுடைய மனைவி. அவள் ஆடும்போதும் பாடும் போதும் பக்க வாத்தியம் வாசிப்பான் பாணன். தன் யாழை மீட்டி அவள் பாடும் பாட்டைத் தொடர்ந்து வாசிப்பான். பாடினி பாடும்போது அவள் குரலுக்கு ஏற்றபடி சுருதி வைத்து

51
51
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/69&oldid=1460091" இருந்து மீள்விக்கப்பட்டது