பக்கம்:அறப்போர்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.பெற்ற பரிசில்‘அவர்களெல்லாம் உன்னைப் பாடியும் பாட்டுக்கு யாழ் வாசித்தும் பரிசு பெற்றார்கள்’ என்று சொன்னது, ‘நான் ஒன்றும் பெறவில்லை’ என்ற குறிப்பைப் புலப்படுத்துகிறது.‘எனக்கும் ஏதாவது பரிசில் தரவேண்டுமே! ஒன்றும் இல்லையா?' என்று சொல்லாமற் சொன்னார் இளஎயினியார்

அமிமயிர்த் திரள்முன்கை
வால் இழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
தண்பொருநைப் புனற்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல் வேந்தனும்மே
வெப்புடைய அரண் கடந்து
துப்புஉறுவர் புறம்பெற்றிசினே;
புறம்பெற்ற வயவேந்தன்
மறம்பாடிய பாடிளியும்மே
ஏருடைய விழுக்கழஞ்சில்
சீருடைய இழைபெற்றிசினே;
இழைபெற்ற பாடிளிக்குக்
குரலபுணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே
என ஆங்கு
ஒள் அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே.

  • மென்மையான மயிரையுடைய திரண்ட முன் கையையும் தூய அணிகளையும் அணிந்த மடப்பத்தை

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/71&oldid=1267440" இருந்து மீள்விக்கப்பட்டது