பக்கம்:அறப்போர்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.சேரமான் புகழ்

ரசன் திருவோலக்கத்தில் வீற்றிருந்தான். புலவர்கள் பலர் அவையில் நிரம்பியிருந்தனர். தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் புலவர்கள் ஈடு பட்டிருந்தனர். அரசனும் அவர்களோடு ஒருவனைப் போல மிக நுட்பமான பொருள்களை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தான். புலவர் கூட்டத்தில் ஒருவராகக் குறுங்கோழியூர் கிழார் வீற்றிருந்தார். அவருடைய ஊர் குறுங்கோழியூர். அதனால் அவரைக் குறுங்கோழியூர் கிழார் என்று வழங்கினர். அவருடைய இயற்பெயரை யாரும் வழங்குவது இல்லை. அதனல் அவருடைய சொந்தப் பெயர் இன்ன தென்றே தெரியவில்லை.

அவையில் வீற்றிருந்த புலவர்கள் மிக்க மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தனர். குறுங்கோழியூர் கிழாருக்கோ மகிழ்ச்சியோடு வியப்பும் மிகுதி யாயிற்று. ’வாழ் நாள் முழுவதும் தமிழே பயின்று உலகியலையே தெரிந்து கொள்ளாமல் வாழும் நமக்குத் தமிழில் ஊற்றம் இருப்பது இயற்கை. அரசியலில் ஈடுபட்டு எத்தனையோ சிக்கல்களில்

56
56
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/74&oldid=1460093" இருந்து மீள்விக்கப்பட்டது