பக்கம்:அறப்போர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


புதிய ஆடைகளை அணிந்து அணிகளைப் புனைந்து உவகைக் கடலில் மூழ்கியிருந்தனர். குறுக் கோழியூர் கிழார் அந்த ஊருக்கு அப்போது போயிருந்தார். அந்த ஊரில் உள்ளவர்கள் அவருக்குப் பழக்கமானவர்களே. திரு விழாவிலே ஈடுபட்டுக் கொண்டானடிக்கும் கூட்டத்தினரில் சிலரைக் கண்ட போது அவருக்கு வியப்பு ஏற்பட்டது. சென்றமுறை அந்த ஊருக்கு வந்திருந்தபோது அந்த மக்களைக் கண்டிருக்கிறார். இளம் பருவத்தையுடைய அவர்கள் தாய்தந்தையரை இழந்து வறுமையில் வாடியிருந்தனர். இப்போதோ புத்தாடையும் அணிகலனும் பூண்டு விளங்கினர்.

“இவ்வளவு விரைவில் இவர்கள் வறுமை நீங்கியதற்குக் காரணம் என்ன?” என்று புலவர் தம் நண்பர்களைக் கேட்டார்.

“சேரமானுடைய அன்பு தான் காரணம்” என்றனர் நண்பர்கள்.

“சேரமானுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?” என்று புலவர் கேட்டார்.

சில நாட்களுக்கு முன் அரசர் பிரான் இவ்வூருக்கு வந்திருந்தனர். இந்த இளைஞர்களைக் கண்டார். நல்ல குடியில் வந்தவர்களாக இருந்தும் இப்போது வறுமையால் வாடுகிறார்களென்பதை அறிந்து உடனே இவர்களுடைய

60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/78&oldid=1267447" இலிருந்து மீள்விக்கப்பட்டது