பக்கம்:அறப்போர்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் புகழ்


வறுமையைப் போக்க முற்பட்டார். நிலமும் பொருளும் வழங்கினார். அவருடைய ஈர நெஞ்சத்தின் பெருமையை அன்று நாங்கள் உணர்ந்து கொண்டோம்" என்று நண்பர்கள் கூறினர்.

‘ஈர நெஞ்சம்’ என்ற சொற்கள் குறுங்கோழியூர் கிழாரின் காதையும் கருத்தையும் குளிர வைத்தன. 'அறிவுடையவர் அரசர், அவர் அறிவுக்கு அளவில்லை என்று எண்ணினோம். அது போற்றுதற்குரியது தான். அறிவாற்றல் ஒருவனுக்குப் பெருமையையும் ஊதியத்தையும் அளிப்பது. ஆனால் அறிவு மாத்திரம் போதாது. அதோடு அன்பும் வேண்டும். அறிவாகிய ஒளி மாத்திரம் இருந்தால் அதனால் வெப்பமே ஏற்படும். தீயின் ஒளியோடு வெப்பமும் இருப்பது போல அறிவொளி ஒருவருக்கு விளக்கந்தந்தாலும் பிறருக்குத் துன்பத்தை விளைக்கவும் கூடும். ஆகவே தண்மையும் ஒளியும் கலந்த திங்களைப் போல அன்பும் அறிவும் கலந்திருந்தால் உலகத்துக்கே அவரால் இன்பம் உண்டாகும். நம்முடைய அரசர் பெருமானுக்கு அறிவும் ஈரமும் ஒருங்கே இருக்கின்றன. அதனால் தான் அவருடைய ஆட்சியிலே யாவரும் இன்புற்று வாழ்கின்றனர், என்று புலவர் எண்ணமிடலானார். அவர்

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/79&oldid=1267448" இருந்து மீள்விக்கப்பட்டது