பக்கம்:அறப்போர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


பித்து வருகிறர்கள். புறத்துறைச் செய்யுட்கள் நானூறு அமைந்தமையால் புறநானூறு என்ற பெயர் வந்தது. இந்தப் பாடல்களைப் பாடியவர் ஒரு புலவர் அல்லர்; பல்வேறு காலத்தில் பல தொழிலும் பல நிலையும் உடையவர்களாய்ப் பல ஊர்களிலே வாழ்ந்தவர்கள். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய மரபில் வந்த புலவர்களின் பாடல்கள் இதில் உள்ளன. முடியுடை மன்னர்களாகிய சேர சோழ பாண்டியர்கள் இயற்றிய பாடல்களும் இதில்இருக்கின்றன.

மற்றத் தொகை நூல்களுக்கு இல்லாத தனிச் சிறப்பைப் புறநானூறு பெற்றிருக்கிறது. இதில் உள்ள பாடல்களிற் பெரும்பாலானவை உண்மையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைச் சார்ந்தவை. மன்னர்களிடையே நிகழ்ந்த போர்களேயும், அவர்களின் வெற்றி தோல்விகளையும், அவர்களுக்குக் துணையாக நின்றவர்களின் இயல்புகளையும், தோல்வியுற்ற மன்னர்களின் காடு அழிந்ததையும், புரவலர்கள் புலவர்களைப் போற்றிவந்த இயல்பையும், போர் மூண்ட காலத்துப் புலவர்கள் இடைப்புக்குச் சமாதானம் உண்டாக்கியதையும், புலவர்களின் பெருமிதத்தையும், பாணர் விறலியர் கூத்தர் ஆகிய கலைவல்லுகர்கள் வள்ளன்மையுடையோரிடம் பரிசில் பெற்ற செய்தியையும், வள்ளல்களின் வண்மைச் செயல்களையும் தெரிவிக்கும் பாடல்கள் இத்தொகை நூலில் கோக்கப் பெற்றிருக்கின்றன. ஆதலின் தமிழ்நாட்டின் பழைய சரித்திரத்தை அறிவதற்கு இந்த நூல் மிகமிகச் சிறந்த துணையாக விளங்குகிறது. அகத்துறைப் பாடல்களில் சார்த்து வகையினால் அங்கங்கே சில சில மன்னர்களையும் செல்வர்களையும் பற்றிய செய்திகள் வரும். புறநானூற்றுச் செய்யுட்களிலோ ஒவ்வொன்றும் ஒவ்வொரு சரித்திரத் தொடர்புள்ள செய்தியைத் தெரிவிக்கும் சேர சோழ பாண்டிய மரபு பற்றிய வரலாற்றுச் செய்திகளும், பாரி முதலிய வள்ளல்களின் சரிதையைப் புலப்படுத்தும் செய்திகளும் இந்த நூலினால்தான் விரிவாக அறியமுடிகின்றன.

iv

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/8&oldid=1265814" இலிருந்து மீள்விக்கப்பட்டது