பக்கம்:அறப்போர்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் புகழ்


“நேற்றுவரையில் இந்தக் குடும்பத்தினர் பகையரசனுக்கு உளவாளிகளாக இருந்தார்கள். இது யாவருக்கும் தெரியும். ஆனாலும் இவர்கள் குற்றத்தை மறந்து பழையபடியே இவர்களுக்கு உரிய பொருளை உதவும்ப்டி அரசர் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய பெருந்தன்மையை இந்தப் பாவிகள் உணர்வார்களா?” என்றார் அதிகாரி ஒருவர்.

“உணர்ந்ததாகக் காட்டாவிட்டாலும் இவர்கள் நெஞ்சு அறியும், வேறு ஓர் அரசராக இருந்தால் இவர்கள் குடும்பத்தையே பூண்டோடு அழித்திருப்பார். நம் அரசரோ, என்ன இருந்தாலும் நெடுங்காலமாக இந்த காட்டிலே வாழும் குலத்தில் பிறந்தவர்களென்ற தாட்சிண்யத்தால் இவர்கள் குற்றத்தைப் பொறுத்து அருள்செய்தார்” என்றார் மற்றோர் அதிகாரி.

“நம்முடைய அரசருடைய கருணைக்கு எல்லேயே இல்லை. அந்தச் சிற்றரசன் தன் அளவை மறந்து சேர நாட்டுக் குடிமக்களுக்குத் துன்பத்தை விளைவித்தான். அவனைக் காலில் தளையிட்டுக் கொண்டு வந்து நிறுத்தினார் சேனாபதி. நம்முடைய மன்னர் அந்தச் செயலைக் கண்டு மகிழவில்லை. உடனே காலில் உள்ள தலையைத் தறிக்கச் சொன்னார். அரச

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/81&oldid=1267450" இருந்து மீள்விக்கப்பட்டது