உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறப்போர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அறப்போர்



குலத்தில் -பிறந்தவர் அறியாமையால் தவறு செய்தாலும், நாம் அந்தக் குலத்தின் மதிப்பை உணர்ந்து நடக்கவேண்டுமென்று அறிவுறுத்தினார்.இந்தக் கருணையை நினைக்கும்போதெல்லாம் எனக்கு உள்ளம் உருகுகிறது."-இது ஒருவர் பேச்சு.

“இதைத்தான் கண்ணோட்டம் என்று புலவர்கள் சொல்வார்கள். கண் இருந்தும் கண்ணோட்டம் இல்லாவிட்டால் பயனில்லை என்று சான்றோர்கள் கூறுவதைக் கேட்டதில்லையா?” -இப்படி ஒருவர் பேசினார்.

இந்தப் பேச்சையெல்லாம் அருகிலே இருந்து கேட்டார் குறுங்கோழியூர்கிழார். அரசனிடம் உள்ள குணங்கள் இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ என்று ஆச்சரியப்பட்டார். உலகத்தில் அள்க்க முடியாத பொருள்கள் என்று எதை எதையோ சொல்கிறார்கள். கடலின் ஆழத்தை அளவிட முடியாது என்கிறார்கள். விசாலமான நிலப்பரப்பை அளவுகாண இயலாது என்கிறார்கள். காற்று அடிக்கிற திசையின் நீளத்தையும் எல்லை கண்டு அளந்து சொல்ல முடியாதாம். எல்லாவற்றையும் தனக்குள்ளே அடக்கிக் கொண்டிருக்கிற ஆகாயத்துக்கும் அளவில்லை. இப்படி அளவிடப்படாத கடலும் ஞாலமும்

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/82&oldid=1267451" இலிருந்து மீள்விக்கப்பட்டது