பக்கம்:அறப்போர்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் புகழ்


வெம்மை உடையது; தெறலை உடையது. சூரியனது கதிர்கள் வெம்மையை உடையன. இந்த இரண்டு வெம்மையும் உயிர்கள் வாழ இன்றியமையாதன. ஆதலின் உ ள்ளங்குளிர்ந்து ஏற்றுக் கொள்வதற்கு உரியன. அவை அந்த நாட்டில் இருக்கின்றன.

சேரமானுடைய நாட்டிலே பிறராலே தெறப்படும் செயல் இல்லை. சோற்றை உண்டாக்கும் தீயின் தெறலும், செஞ்ஞாயிற்றின் தெறலும் அல்லாமல் பிறிது தெறலைக் குடிமக்கள் அறியார். அவனுடைய குடை நிழலில் தண்மை பெற்றுக் குறை விலா நிறைவுடன் அவர்கள் வாழ்கிறாரர்கள். '

அந்த நாட்டுக் குடிமக்களுக்கு வில் என்று ஒர் ஆயுதம் இருப்பதே தெரியாது. பகைவர்கள் யாரும் இல்லாமையால் போரும் இல்லை. போர் இருந்தால்தானே வில்லுக்கும் அம்புக்கும் வேலையுண்டு? பழைய வில்லும் அம்பும் எந்தக் கொட்டிலிலே துங்குகின்றனவோ! அமைதியான இன்ப வாழ்வு வாழும் காட்டில் வில்லுக்கு வேலை இல்லை அல்லவா? ஆனால் வேறு ஒரு வில்லை அவர்கள் அறிவார்கள். அதனைக் கண்டு களிப்பார்கள். அது எந்த வில் தெரியுமா? வண்ணன் அழகு காட்டி வானத் தில் தோன்றும் இந்திர வில்லாகிய திரு வில். மேகமூட்டம் போட்டிருக்கும்போது இனி

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/85&oldid=1267453" இருந்து மீள்விக்கப்பட்டது