உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறப்போர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


தல்லாமல்-பகைவர் உண்ணாத மண் சேரநாட்டு மண்

வற்றையெல்லாம் புலவர் கவிதையுள்ளத்தோடு நினைத்துப் பார்த்தார். அவன் காட்டில் வாழ்பவர்கள் அறியாதவற்றையும் அறிந்க வற்றையும் அடுக்கிப் பார்த்தார். அவர்கள் பிறரால் உண்டாகும் தெறலு அறியார்; ஆனால் சோறுண்டாக்கும் தீயின் தெறலும் செஞ்ஞாயிற்றுத் தெறலும் அவர்களுக்குத் தெரியும். கொலை வில்லை அறியார்; திருவில்லை அறிவார். பிறர் உண்ணா மண் அரசனது மண், ஆனால் அதை வயவுறு மகளிர் உண்பார்கள். எத்தனை அமைதியான நாடு இன்ப வளமுடைய நாடு

ப்படிக் கவிதைக்கு ஏற்ற பொருள்களே அவர் உள்ளம் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டே வந்தது. மேலும் அவருடைய எண்ணம் விரிந்தது. அரசனுக்கு வாய்த்த பண்புகளையும் திறமையையும் கருவிகளையும் எண்ணி எண்ணி இன்புற்றார். பகைவர்கள் அணுகுவற்கு அரிய மதிலையுடையவன் சேரமான். அந்த அரண் கட்டுக் காவலை உடையது. பலபல வீரர்கள் அந்த அரணில் இருந்தார்கள். அங்கே உள்ள அம்பு வகைகளுக்குக் கணக்கில்லை. அவ்வளவு இருந்தும் அவற்றைப் பயன்

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/88&oldid=1267459" இலிருந்து மீள்விக்கப்பட்டது