உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறப்போர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் புகழ்


படுத்தவேண்டிய அவசியமே இல்லை. அந்த அம்புகள் அங்கே வேலையற்றிருக்கின்றன; அம்பு துஞ்சும் கடி அரண் அவனுடைய கோட்டை.

சேரமான் நடத்தும் செங்கோலாட்சி நாடறிந்தது; புலவர் நாவறிந்தது. தரும தேவதை அவன் நாட்டில் தங்கி நாலுகாலாலும் நின்று நடைபோடுகிறது. அவனுடைய நாடு அறம் வளரும் கோயில். அவ்வறம் யாதோர் இடையூறும் இன்றி இனிதே தங்கும்படி செங்கோல் செலுத்தும் பேராளன் சேரமான். அறம் துஞ்சும் செங்கோலை உடைய அவனுடைய நாட்டில் வாழும் குடிமக்களுக்குக் குறை ஏது? பசி இல்லை; பிணி இல்லை; பகையும் இல்லை.

ஒரு நாட்டில் வளம் குறைந்தால் அங்கே உள்ள குடிமக்கள் வேற்று நாட்டுக்குப் போய் விடுவார்கள். அதற்குமுன் அங்குள்ள பறவைகள் வேற்று நாட்டுக்குப் போய்விடும். புதிய புள் வந்தாலும் பழைய புள் போனாலும் ஒரு நாட்டுக்குத் தீமை உண்டாகும் என்று அக்காலத்தில் எண்ணினார்கள். அந்த இரண்டும் தீய நிமித்தங்கள். மற்ற நாடுகளில் இவை நிகழ்ந்தால், "இனி என்ன ஏதம் வருமோ?" என்று அந்நாட்டில் உள்ளார் அஞ்சுவார்கள், ஆனால் சேரமானுடைய நாட்டிலுள்ளார் எவ்வகையினாலும் நிரம்பினவர்கள் ஆதலின்

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/89&oldid=1267456" இலிருந்து மீள்விக்கப்பட்டது