பக்கம்:அறப்போர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


இத்தகைய தீய நிமித்தங்களுக்கு அஞ்சமாட்டார்கள். கரையிலுள்ள மரத்தைப் பற்றிக் கொண்டவனுக்கு ஆற்று நீர் எவ்வளவு வேகமாக ஓடினால் தான் என்ன? புதிய புள் வரினும் பழம் புள் போனாலும் அவற்றைக் கண்டு இந்த நாட்டார் அஞ்சுவதில்லை; நடுங்குவதில்லை. அவ்வளவு சிறந்த வளப்பம் நிறைந்திருந்தது அந்த நாட்டில். என்ன பஞ்சம் வந்தாலும் குடிமக்கள் துன்புறாமல் இருப்பதற்கு ஏற்ற பொருள்களைச் சேரமன்னன் சேமித்து வைத்திருந்தான். ஆகவே தீய சகுனம் கண்டு நடுங்க வேண்டியதில்லையே!

இவ்வாறு நாட்டு மக்களுக்கு வேண்டியவற்றை முன்கூட்டியே நினைந்து சேமித்து வைத்துப் பாதுகாக்கும் மன்னனைத் தாயென்று சொல்லலாமா? தெய்வமென்று சொல்லலாமா? இன்னும் உயர்வாகக்கூடச் சொல்லாம். அவனைப் போன்ற மன்னனை உலகம் முன்பும் அறிந்தது இல்லை; பின்னும் அறியப் போவதில்லை. அவனிடத்தில் குடிமக்களுக்கு அன்பு மிகுதியாக இருந்ததென்று சொல்லவும் வேண்டுமா? ஒரு விதத்தில் அவன் அவர்களுக்குத் தாயைப்போல இருந்தான். மற்றொரு விதத்தில் குடிமக்கள் அவனுக்குத் தாயைப் போல இருந்தார்கள்.

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/90&oldid=1267460" இலிருந்து மீள்விக்கப்பட்டது