பக்கம்:அறப்போர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் புகழ்


தாய் தன் குழந்தையிடத்தில் காட்டும் அன்பு மிகமிக உயர்ந்தது. அதன் நலத்துக்கு வேண்டிய பொருள்களைத் தேடிக் கொணர்ந்து வழங்குவாள். எவ்வளவு பாதுகாத்து வந்தாலும் தன் அருமைக் குழந்தைக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்று அஞ்சிக் கொண்டே இருப்பாள். அந்தக் குழந்தையை அலங்காரம் செய்து அழகு காண்பாள்; அடுத்த கணத்திலே, “ஐயோ! என் கண்ணே பட்டுவிடப் போகிறதே!” என்று விரலை மடக்கித் தரையில் நெரித்துத் திருஷ்டி கழிப்பாள். வீதியில் போனால் வண்டி ஏறிவிடுமோ என்று அஞ்சுவாள். அன்பு அதிகமாக அதிகமாகத் தன் குழந்தை சௌக்கியமாக வளரவேண்டுமே என்று கணந்தோறும் அஞ்சிக் கொண்டே இருப்பாள். இங்கே குடிமக்கள் தாய் நிலையில் இருந்தார்கள். கிடைப்பதற்கரிய மன்னன் தமக்குக் கிடைத்திருக்கிறான் என்ற மகிழ்ச்சி மீதூர்ந்தாலும், அவனுக்கு எந்த விதமான இடையூறும் நேராமல் இருக்கவேண்டுமே என்ற கவலையோடிருந்தார்கள். அவன் மிக மிகச் சிறப்புடையவனாக இருத்தலினால் மன்னுயிர் யாவும் இவ்வாறு அஞ்சின.

இதையும் நினைத்துப் பார்த்தார் புலவர். தாம் கண்டது, கேட்டது, நினைத்தது எல்லா-

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/91&oldid=1267461" இலிருந்து மீள்விக்கப்பட்டது