பக்கம்:அறப்போர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் புகழ்


உண்டாயிற்று. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை நாடிச் சென்றார். தம் கவியைப் பாடினர். அவையில் இருந்த புலவர்கள் யாவரும் ஒவ்வோரடியையும் கேட்டு இன்பத்தில் ஆழ்ந்தனர். ஒவ்வொரு சொல்லையும் சுவைத்தனர்.

புலவர் பரிசு பெற்றார் என்று சொல்லவும் வேண்டுமா? அவர் பாடிய பாடல் வருமாறு :

இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு
அவைஅளந்து அறியினும் அளத்தற்கு அரியை
அறிவும் ஈரமும் பெருங்கண் ணோட்டமும்;
சோறுபடுக்கும் தீயொடு
செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிதுதெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே;
திருவில் அல்லது கொலைவில் அறியார்;
நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறன்அறி வயவரொடு தெவ்வர் தேயஅப்
பிறர்மண் உண்னும் செம்மல், நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டுஉணின் அல்லது
பகைவர் உண்ணு அருமண் ணினையே;
அம்புதுஞ்சும் கடிஅரணால்
அறம் துஞ்சும் செங்கோலையே;
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்

75
75
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/93&oldid=1460095" இலிருந்து மீள்விக்கப்பட்டது