பக்கம்:அறப்போர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்




விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை;
அனையை ஆகல் மாறே,

மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.

பெரிய கடலினது ஆழமும், அகன்ற நிலத்தினது அகலமும், காற்று வீசுகின்ற திசைகளும், உருவமின்றி நிலைபெற்ற ஆகாயமும் என்று சொல்லப் பெறும் அவற்றை அளந்து அறிந்தாலும், அறிவும் அன்பும் பெரிய கண்ணோட்டமும் அளப்பதற்கு அரியை. நீ; சோற்றை உண்டாக்கும் தீயின் வெம்மையும் சிவந்த கதிரவனுடைய வெம்மையும் அல்லாமல் வேறு வெம்மையை நின் குடைநிழலில் வாழும் குடிமக்கள் அறியார்; அழகிய வானவில்லையன்றி வேறு கொலைத் தொழிற்குரிய வில்லை அறியார்; கலப்பையை யன்றி வேறு ஆயுதத்தை அறியார்; போரிடும் வகைகளை யெல்லாம் அறிந்த வீரர்களோடு பகைவர் அழியப் பிறருடைய நிலத்தை உண்ணும் பெருமையை உடையவனே, நின் காட்டில் உள்ள கருவுற்று மயற்கையுள்ள மகளிர் விரும்பி உண்ணுவதையன்றிப் பகைவர் உண்ண மாட்டாத அரிய மண்ணை உடையாய், அம்புகள் செயலொழிந்து தங்கும் காவலையுடைய அரணையும், அறம் கவலையின்றித் தங்குதற்குக் காரணமான செங்கோலையும் உடையாய்; புதிய பறவைகள் வந்தாலும் பழைய பறவைகள் போனாலும் நடுங்குவதையறியாத இன்பமான பாதுகாப்பைச் செய்பவன் நீ; அத்தகைய பெருமைகளே உடையவனாக இருக்கும் காரணத்தால் நின்னாட்டிலுள்ள உயிர்க் கூட்டமெல்லாம் நினக்கு ஏதேனும் இடையூறு வருமோ என்று நின்பொருட்டு அஞ்சும்.

இருமுந்நீர்-கரியகடல் என்றும் சொல்லலாம். குட்டம். ஆழம். வியல்-அகலம். ஞாலம். நிலம். வளி-காற்று. வறிது. உருவமின்றிச் சும்மா. நிலை இய-நிலைபெற்ற, காயம்-ஆகாயம்; முதல் எழுத்துக் குறைந்து நின்றது; முதற் குறை.

76
76
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/94&oldid=1460096" இலிருந்து மீள்விக்கப்பட்டது