பக்கம்:அறப்போர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் புகழ்


என்ற ஆங்கு அவை - என்று சொல்லப் பெறும் அவற்றை. ஈரம் - அன்பு. கண்ணோட்டம் - குறையை எண்ணாது காட்டும் அன்பு, படுக்கும் . உண்டாக்கும். தெறல் . சுடுதல்; வெம்மை. பிறிது - வேறு. நின்நிழல் - நினது குடைநிழவில். திரு வில் - அழகிய இந்திர வில். நாஞ்சில் - கலப்பை. படை- போர்க்கருவி. திறன் - போர் செய்யும் வகை. வயவர் - வன்மை மிக்க வீரர். தெவ்வர் - பகைவர். தேய - அழிய. மண் உண்ணும் - நாட்டைக் கைக் கொண்டு பயன்படுத்தும். செம்மல் - பெருமையை உடையவன். வயவுறு மகளிர் - கருவுற்ற பெண்கள். வயா - மயற்கை நோய். வேட்டு - விரும்பி. துஞ்சும் - வேலையின்றிக் கிடக்கும். கடி - காவலேயுடைய, அரணால் - கோட்டையோடு; ஆல் என்ற உருபு ஓடு என்ற பொருளில் வந்தது. அறம் துஞ்சும் தருமம் கவலையின்றித் தங்கியிருக்கும். புள் - பறவை. விதுப் புறவு - நடுங்குதல். ஏமம் - இன்பம், காப்பினே - காவலைச் செய்வாய். அனையை - அத்தகைய இயல்புடையாய். மாறே - காரணத்தால், அஞ்சும்மே. அஞ்சுமே என்றது செய்யுள் நோக்கி விரிந்தது.

இது வாகைத் திணையில் அரசவாகை என்னும் துறையில் அமைந்த பாட்டு. அரசன் தன் இயல்பிலே சிறந்து நிற்பதைப் பாடுவதனல் இத்துறை ஆயிற்று.

இது புறநானூற்றில் உள்ள 20-ஆவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/95&oldid=1460097" இலிருந்து மீள்விக்கப்பட்டது