பக்கம்:அறப்போர்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறப்பது எப்படி


தகுதிக்கு ஏற்பப் பாராட்டிப் பரிசில் வழங்குவதை உயர்வாகக் கொண்டாடுவார்கள் புலவர்கள்.

கிள்ளிவளவன் வரிசையறிவதில் வல்லவனாதலின் சிறந்த புலவர்கள் பலர் அவனை நாடி வந்தனர். வளவனுடைய பெருமதிப்புக்குரிய புலவர்களுக்குள் ஆவூர் மூலங்கிழாரும் ஒருவர். அவரைப் போன்ற பெரும் புலவர்களோடு இடைவிடாது பழகவேண்டும் என்ற ஆர்வம் கிள்ளிவளவனிடம் இருந்தது. தொடர்ந்து பல நாட்களாக ஆவூர் மூலங்கிழார் கிள்ளிவளவனைப் போய்ப் பார்க்கவில்லை. வேறு வேலை இருந்தமைதான் அதற்குக் காரணம். அதோடு வேறு ஊர்களுக்குச் செல்லவேண்டியும் இருந்தது. அவரை நெடு நாட்களாகக் காணாமையினால் கிள்ளிவளவனுக்குத் துன்பம் உண்டாயிற்று. அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தான்.

புலவர்கள் எந்த இடத்துக்குச் சென்றாலும் சிறப்பைப் பெற்ற காலம் அது. சோழ நாட்டிலே பிறந்த புலவராக இருந்தாலும் சேர பாண்டிய நாடுகளுக்குச் சென்று அங்கே பல காலம், தங்க அங்குள்ள மன்னர்களாலும் செல்வர்களாலும் சிறப்புப் பெறுவதுண்டு. ஒரு நாட்டிலே பிறந்தார். வேற்று நாட்டுக்குச்

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/97&oldid=1267467" இருந்து மீள்விக்கப்பட்டது