பக்கம்:அறப்போர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறப்பது எப்படி?


யிருந்தார்; அவ்வளவுதான். கிள்ளிவளவன் அவரைப் பார்க்கவேண்டுமென்ற ஆர்வத்தோடு இருப்பதை உணர்ந்தவுடன் அவர் உறையூரை நோக்கிப் புறப்பட்டார்.

உறையூரை அடைந்து சோழனது அவைக் களத்தைப் புலவர் அணுகினார். பல நாட்களாகப் பசித்திருந்தவன் உணவைக் கண்டது போல வளவனுக்கு இன்பம் உண்டாயிற்று. இருக்கையினின்று எழுந்து வந்து புலவரை வரவேற்றான். தக்க ஆசனத்தில் இருக்கச் செய்து க்ஷேமலாபங்களை விசாரித்தான்.

“தமிழ் நாடு மிக விரிந்தது. புலவர்களுக்கு யாதும் ஊர்; யாவரும் உறவினர். தங்களைப் போன்ற பெரிய கவிஞர்களுக்குச் சென்ற சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டு. எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் அன்று வந்த விருந்தினரைப் போல மிக்க அன்புடன் பாராட்டிப் போற்றுவார்கள். தாங்கள் சோழ நாட்டையும் என்னையும் இவ்வளவு காலமாக மறந்து போனீர்களே! அவ்வாறு எம்மை அடியோடு மறக்கச் செய்யும்படியாகத் தங்களை வழிபட்டுப் போற்றிய நாடு எதுவென்று நான் தெரிந்து கொள்ளலாமா? இவ்வளவு காலம் எங்கே தங்கியிருந்தீர்கள்?” என்று கேட்டான் அரசன்.

81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/99&oldid=1267469" இலிருந்து மீள்விக்கப்பட்டது