பக்கம்:அறவோர் மு. வ.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

அறவோர் மு. வ.


சிறுகதைப் பணி

நாவல் இலக்கிய உலகில் தமக்கென்று அழியாத தீர் இடத்தை வகிக்கும் மு. வ. சிறுகதைத்துறையிலும் தம் கலையுணர்வினைத் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார். நாவல் படைக்கும் முன்பாகவே அவர் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். 1939 ஆம் ஆண்டில் 'சிறுவர்களுக்கான கதைகள்' என்னும் வரிசையில் ஆங்கிலக் கதைகளின் தழுவலாகச் சில சிறுகதைகளை எழுதியுள்ளார். அவர் எழுதிய ஷேக்ஸ்பியர் கதைகள் மற்றும் பிற கதைகள் 3 தொகுதிகளாக வெளியாகியுள்ளன. சிறுவர்களுக்கென்று அல்லாமல் பொதுவாக எல்லோருக்கும் உரிய சிறுகதை களையும் மு. வ. படைத்துள்ளார். நாவல், சிறுகதைத். தொகுதி இரண்டும் ஏறத்தாழ சமகாலத்திலேயே வெளி வந்துள்ளன.

மு. வ. வின் சிறுகதைத் தொகுதிகள்

மு. வ. வின் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளாக அமைந்துள்ளன. 'விடுதலையா?' 'குறட்டை ஒலி' என்பன அவ்விரு தொகுதிகளாகும். அத்தொகுதிகள் முறையே 1944, 1953 ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன. 'விடுதலையா?' என்னும் முதல் சிறுகதைத் தொகுதியில் 'விடுதலையா?’, 'தேங்காய்த் துண்டுகள்’, ‘வாய் திறக்க மாட்டேன்’, “எதையோ பேசினர்’, ‘கட்டாயம் வேண்டும் , 'எவர் குற்றம்' ஆகிய ஆறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இச்சிறுகதைத் தொகுதி தமிழ் வளர்ச்சிக். கழகத்தின் பாராட்டினைப் பெற்றது.

மு. வ. வின் மற்றொரு சிறுகதைத் தொகுதி 'குறட்டை ஒலி'. இதன் கண் பதினொரு சிறுகதைகள் உள்ளன. அந்த மனம் வருமா? சுடரின் நகைப்பு, இறந்த சிற்றப்பா, அமாவாசையார், எல்லோரும் சமம், யாரோ தெரியாது, உலகம் பொய், குறட்டை ஒலி, வாழும் வழி, இயற்கை பொல்லாதது, அக்கரைப் பச்சை என்பன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/103&oldid=1224114" இலிருந்து மீள்விக்கப்பட்டது