பக்கம்:அறவோர் மு. வ.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

அறவோர் மு. வ.

என 'விடுதலையா?' நூலிற்கு மு. வ. எழுதியுள்ள முன்னுரையின் வழி அறியலாம். மேலும் சிறுகதையை அவர் ஒரு சீரிய கலையாகவே கருதினார். அவரது கதைகளில் மேற்குறிப்பிட்ட கொள்கைகளின் ஆறாமை அமைந்துள்ளமை அறியத்தக்கது. பொதுவாக, எந்த ஒரு கலை வடிவமும் மக்களை மையமிட்டதாக - மக்களுக்காகவே எழுந்ததாக இருக்கவேண்டும் என்ற கொள்கையை உடையவர் மு. வ. கலை கலைக்காக, கலை மக்களுக்காக, கலை காசுக்காக என்று சுட்டப்பெறுகின்ற மூவகைக் கொள்கைகளில் இடைப்பட்ட கொள்கையை மையபமிட்டதாகவே அவரது படைப்புகள் அனைத்தும் அமைந்தன. அவர் படைத்த சிறுகதைகளும் இதனைத் தாங்கியே உள்ளன.

மு. வ. வின் சிறுகதைகள் - இயல்புகள்

சிறுகதைத் தலைப்புகள்:

மு. வ. வின் சிறுகதைத் தொகுதிகளில் உள்ள கதைகளின் தலைப்புகளை நோக்கினாலே அவரது படைப்புத் திறனும் நுண்மாண்துழைபுலமும் நன்கு வெளிப்படும்.

1. வினாவாகத் தலைப்புகள் - விடுதலையா? அந்த
மனம் வருமா?
2. உருவகத் தலைப்பு - சுடரின் நகைப்பு.
3. பழமொழித் தலைப்பு - அக்கரை பச்சை.
4. பெயரெச்சத் தலைப்பு - இறந்த சிற்றப்பா.
5. தத்துவத் தலைப்பு - உலகம் பொய்.
6. வினை முற்றாக அமையும் தலைப்பு - வாய் திறக்கமாட்டேன்.
6. சமுதாய உணாவு அமைந்த தலைப்பு - எல்லோரும் சமம்.

சிறுகதைகளின் தலைப்பு படிப்போர்க்கு ஆவலையும், சிந்தனையையும் தூண்டும் வண்ணம் அமையவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/105&oldid=1224120" இலிருந்து மீள்விக்கப்பட்டது