பக்கம்:அறவோர் மு. வ.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

103

என்ற திறனாய்வுக் கருத்துக்கேற்ப மு. வ. படைத்துள்ள கதைகளின் தலைப்புகள் அமைந்துள்ளமை காணலாம். தலைப்பிடுவதிலே மு.வ. விடம் ஒரு கலைநயம் - கலைக் கண்ணோட்டம் ஒளிர்வதை நாம் உணரமுடிகின்றது.

செயல் ஒருமை (Unity of action)

கதைக்கரு, கதை நிகழ்ச்சி, கதை மாந்தர், கதையின் நோக்குநிலை ஆகியவற்றில் ஏற்படுகின்ற ஒருமுகப்பட்ட ஒழுங்குமுறையைச் செயல் ஒருமை என்பர். கதையின் முதல் சொற்றொடரிலிருந்து இறுதிச் சொற்றொடர் வரை செயல் ஒருமை சிறந்து விளங்க வேண்டும் என்று காலின்ஸ் என்னும் திறனாய்வாளர் மொழிவார். மு.வ.வின் சிறு கதைகளுள் ஒரு சிலவற்றைத் தவிரப் பெரும்பாலானவற்றுள் செயல் ஒருமை சிறக்க அமைந்துள்ளது. கதையின் தனித்த குறிக்கோளை வெளிப்படுத்தும் நோக்கில் கதையின் ஒவ்வொரு சிறுகூறும், நிகழ்ச்சியும், பாத்திரமும் பொருத்மாக மு. வ. கதைகளில் அமைந்துள்ளன. 'விடுதலையா?' வில் இச்செயல் ஒருமை சிறப்பாக இடம் பெறவில்லை. ஒரு பொதுவுடைமை வாதியின் விளக்கவுரைகள், மாணவப் பருவம் தொடங்கி ஒரு பாத்திரத்தை வளர்த்துச் செல்லும் முறை போன்றவை இங்குச் செயல் ஒருமைக்குத் தடையாக அமைந்துள்ளன. சுடரின் நகைப்பு, குறட்டை ஒலி, அந்த மனம் வருமா, இயற்கை பொல்லாதது ஆகிய கதைகளில் இச்செயல் ஒருமை சிறப்பாக அமைந்துள்ளது, கதையைப் படிப்படியாக உச்சத்தை நோக்கி வளர்த்துச் செல்லும் பாங்கு இக்கதைகளில் நன்கு வெளிப்படுகின்றது. இவ்வாறு, செயல் ஒருமை என்னும் கலைத்திறமும் மு. வ. வின் சிறு கதைகளில் ஒளிரக் காண்கிறோம்.


பாத்திரப் படைப்பு(Characterisation)

எந்த ஒரு கலைப்படைப்பும் அதன்கண் அமைகின்ற பாத்திரப்படைப்பிற்கேற்பவே நிலைபேற்றுத் தன்மையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/106&oldid=1224123" இலிருந்து மீள்விக்கப்பட்டது