பக்கம்:அறவோர் மு. வ.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

அறவோர் மு. வ.

புலப்பாட்டை எளிமைப்படுத்தவல்லது. மு. வ. வின் சிறுகதைகளில் இவ்வுரையாடற்பகுதி அளவாகவும், அழகாகவும் அமைந்துள்ளது. சான்றாக,

"ஒரு நண்பரை வழியில் பார்த்துவிட்டு வந்தேன்"
"நண்பர் என்ன பால்? ஆனா? பெண்ணா?"
"பலர்பால்"
"இலக்கணம் கேட்கவில்லை. பொருள் கேட்டேன் "
-குறட்டை ஒலி, பக். 129

என்னும் பகுதியைக் குறிப்பிடலாம். இதில் நகைச்சுவைத் தன்மை அமைந்த பொருளை நேரடியாக விளக்குகின்ற, வினா - விடை முறையோடு கூடிய உரையாடல் அமைப்பு இடம் பெற்றிருக்கின்றது. இதுபோன்று பல நிலைகளில் அமையும் உரையாடற்பகுதிகளை மு.வ. வின் சிறுகதைகளில் காணலாம்.

முடிவு

மு. வ. வின் நாவல்களைப் போலவே அவரது சிறுகதைகளும் ஒழுங்கமைவு என்னும் கலைக்கூறைப் பெற்றுத் திகழ்கின்றன. உருவம், உள்ளடக்கம், உத்தி என்னும் முதன்மைக் கூறுகளைச் செறிவுறக் கையாண்டு, தம் சிறு. கதைகளைச் சீரிய கலைப்படைப்பாக்கியுள்ள தன் மூலம் அவர் சிறுகதைக் கலைஞராகவும் திகழ்கிறார்.

டாக்டர் மு. வ. வின் நாடகங்கள்

முத்தமிழ்க் கூறுகளில் ஒன்றாகிய நாடகம் கண், செவி ஆகிய இரண்டு புலன்களாலும் நுகரத்தக்க கலையாகும்; இக் கலைப்பிரிவிலும் டாக்டர் மு. வ. தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார் என்று கூறுவது பொருத்தமாகும்; இவர் பதினொன்று நாடகங்களை இயற்றியுள்ளார். அவை கீழ்வரும் வகைப்பாட்டான் விளக்க முறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/109&oldid=1224137" இலிருந்து மீள்விக்கப்பட்டது