பக்கம்:அறவோர் மு. வ.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

அறவோர் மு. வ.


சமே இன்று ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கல்விச் செல்வத்தை ::வழங்கும் அறிவு நிலையங்களாக விளங்குகிறது. இத்தகைய ::அறவோரின் வரலாற்றைப் பலரும் அறிதல் நலம். உயர்வு ::நவிற்சியும் திரிபும் இல்லாமல் உள்ளவாறே விளக்கும் நாடகமாக இச்சிறுநூல் அமைந்துள்ளது.

என்று குறிக்கின்றார் டாக்டர் மு. வ.

1952 ஆம் ஆண்டு சூலைத் திங்களில் எழுதி வெளியிடப் பெற்ற நாடகம் 'இளங்கோ’ என்பதாகும். இந்நாடகம் இளங்கோ அடிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு புனையப்பெற்றது. இதில் இளங்கோவடிகள் ஒரு நாடக மாந்தராவார்; துறவியாக இருப்பினும் இல்லறத்தின் மேன்மையினைப் புகழ்கின்றார்; சமய ஒருமையினைப் போற்றுகின்றார். சேர இளவலாக இருப்பினும் மூவேந்தரையும் மதித்துப் போற்றுகின்றார். தமிழகத்தின் ஒற்றுமையை வலியுறுத்துகின்றார். இளங்கோவின் ஆளுமை, உயர்ந்த குறிக்கோள்கள், நாடகத்தில் வடிக்கப்பட்டுள்ளன

'இளங்கோ' என்னும் இந்நாடகத்தில் சிலப்பதிகாரம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் வினாக்களாகப் பல்வேறு நாடகமாந்தர்களால் எழுப்பப்படுகின்றன. அவற்றிற்கெல்லாம் இளங்கோவடிகள் விடைதருகிறார். இந்நாடகத்தைச் சிலம்பின் திறனாய்வு என்று கூறலாம். மு. வ. வின் கற்பனைத்திறன் சிறப்புற வெளிப்படும் நாடகங்களுள் குறிப்பிடத்தகுந்த நாடகம் 'இளங்கோ' ஆகும். அவரது நாடகங்களுள் இதனையே தலைசிறந்தது என்று கருதலாம். கீழ்வரும் நாடகத்தின் பகுதிகள் அதன் சிறப்பைப் புலப்படுத்தும்.

சேரன் : ...கால்கோட் காதையில் 'இமிழ்கடல் வேலியைத் ::::தமிழ்நாடு ஆக்கிய, இது நீ கருதினை ஆயின் ஏற்பவர், முதுநீர் ::::உலகில் முழுவதும் இல்லை' என்று எழுதி இருக்கின்றாய்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/111&oldid=1241256" இலிருந்து மீள்விக்கப்பட்டது