பக்கம்:அறவோர் மு. வ.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

அறவோர் மு. வ.

இளந்துறவி: விளங்கவில்லை அடிகளே!
இளங்கோ : ஒரு நாட்டில் வழிகாட்டும் அறிஞர் களிடமும் தலைவர்களிடமும் பொறாமை வாழ்ந் தால், அந்த நாடு வாழாது. ஐந்தவித்தானடிகள் போன்ற அறிஞர்களிடமும் தமிழகத்தை ஆளும் தலைவர்களிடமும் பொறாமை காணும் போதெல் லாம் எனக்கு அந்த வருத்தம்தான் தோன்று கின்றது. நம்மை எல்லாம் வளர்த்துப் பண்படுத்தி வரும் தமிழ் மொழியும் தமிழகமும் எப்படி ஓங்கி வாழப் போகின்றன என்று கவலைப்படு கின்றேன். பொறாமை ஒரு நச்சுப் பாம்பு- அதன் நஞ்சு ஏறினால் நாடும் மொழியும் நலிந்து போகுமே!

மூன்றாவதாக வெளிவந்த நாடகத்தொகுதி மனச் சான்று” என்னும் தலைப்பில் அமைந்த நூலாகும். இது 1952 ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் வெளிவந்தது. இத்தொகுதியில் “மனச்சான்று” என்னும் தலைப்பினில் அமைந்த நாடகம் காந்திய நெறியை வற்புறுத்துகின்றது: "கிம்பளம்" என்னும் தலைப்பினில் அமைந்த நாடகம் தீயவர்களையும் அனுசரித்துப் போனால்தான் உலகில் வாழமுடியும் என்று கூறுகின்றது; 'ஏமாற்றம்' என்னும் தலைப்பினில் அமைந்த நாடகம் சமுதாயத்தில் பணத்தின் மதிப்பினையும், தனி மனிதனின் மதிப்பின்மையையும் தெளிவாக்குகின்றது. 'பொதுநலம்’ என்னும் தலைப்பினில் அமைந்த நாடகம் காந்தியைப் போன்று சமயம் வாயிலாகப் பொதுத் தொண்டு புரியவேண்டும் என்பதனை அறிவுறுத்துகின்றது. இந்நாடக நூலின் முன்னுரையில் டாக்டர் மு. வ.

கல்லூரிக் கழகங்களில் நடிப்பதற்கென்று யான் அவ்வப்போது எழுதிய நான்கு ஓரங்க நாடகங்களின் தொகுதியே இந்நூல். நாடகமாக நடித்த இளைஞர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/113&oldid=1462056" இலிருந்து மீள்விக்கப்பட்டது