பக்கம்:அறவோர் மு. வ.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

119

சிந்திக்கச் சிந்திக்க என் மூளை அவர் மூளையை நண்ணியது. நுண்ணறிவுக்கேற்ற முகம் வடிந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன்.

"முதல் முதல் வரதராஜனார் பேச்சை யான் வெட்டு வாணத்தில் கேட்டேன். அப்பேச்சு, அவர் முக அமைப்பைப் பற்றி யான் கொண்ட முடிவை உறுதிப்படுத்தியது. அவரது எழுத்தும் பேச்சைப் போலவே இருத்தல் கண்டேன்.

"கூட்டம் கூடுதற்கு முன்னர்க் காலையிலும் கூட்டம் முடிந்த பின்னர் மாலையிலும் வரதராஜனாரும் யானும் ஆற்றங்கரைக்குச் செல்வோம்; தோட்டங்களுக்குப் போவோம். இயற்கையை எண்ணுவோம்; பேசுவோம்: உண்போம். அவர் திருப்பத்துாரில் வதிந்தபோது இயற்கையோடியைந்த வாழ்வு அவரிடம் தானே தவழ்ந்தது."

இவ்வாறு 'கூறாது நோக்கிக் குறிப்புணரும்' தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களின் கூற்றிற்கிணங்க மு. வ. அவர்கள் இளமைதொட்டே இயற்கையில் ஊறித் திளைத்தவராவர். 'பழந்தமிழிலக்கியத்தில் இயற்கை' என்ற தலைப்பில் தம் டாக்டர் பட்டத்திற்குரிய ஆராய்ச்சியினை மேற்கொண்டு வெற்றி பெற்றார்கள். இன்னும் ஆராய்ச்சியுலகில் மணிமுடியாக அமையத்தக்க அவரது நூலான 'ஓவச் செய்தி’ பிறந்த வரலாற்றினை, ஒரு பாட்டு; அதைக் குறித்துப் பல நாள் போராட்டம். இரண்டு நாள் இரவும் பகலும் ஏக்கம். மூன்றாம் நாள் மாலை வேலத்து மலையை அடுத்து அழகிய ஒடையில் உலவும்போது எதிர்பாராத விளக்கம்; தெளிவால் பிறந்த பேருவகை. அவைகளே இந்நூலாக உருப்பெற்றது’ என்று குறிப்பிட்டிருக்கக் காணலாம்.

இளமைக் காலத்திலேயே சான்றாண்மைக்குரிய சீாிய பண்புகள் இவரிடம் படிந்திருந்தன. எளிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/122&oldid=1244222" இலிருந்து மீள்விக்கப்பட்டது