பக்கம்:அறவோர் மு. வ.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

அறவோர் மு. வ.

உடைகளையே உடுத்துவார். காந்தியத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்த இவர் துாய வெள்ளிய கதராடையினையே உடுத்தி வந்தார். நெடிய உருவமும் கரிய நிறமும் வாய்ந்து எடுப்பான தோற்றங் கொண்டிருந்த இவரின் கண்கள் ஒளிமயமானவை. உள்ளொளி துலங்கும் மனத்தை வெளிப்படுத்தும் கூரிய சீரிய பார்வை. மேலும் அருளொளி துலங்கும் விழிகள் எனலாம்! அரவணைக்கும் கைகள் எனலாம். பிறருக்கு எப்போதும் உதவி செய்ய விரையும் மனம் எனலாம். குடும்பப் பாசத்தோடு பிறரிடம் பழகும் பெருமனம் இவருடையது எனலாம். தம் உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்காத எளிய உணவையே உண்டு, பழங்களை மிகுதியாகச் சேர்த்துக் கொண்டு வாழ்ந்தார் எனலாம். வருவாயைத் தாம் தேடிச் செல்லாமல் வருவாய் தம்மை நாடி வர உழைப்பையும் அறிவையும், பண்பையும், முயற்சியையும் பெருக்கிக் கொண்டவர் மு.வ. ஆவர்.

1931 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரை நலிந்த உடலை ஒம்ப வேண்டும் என்று அரசாங்கப் பணியை விடுத்துச் சொந்தவூர் சேர்ந்த மு. வ. அவர்கள் கற்றுக் கற்று உயர்ந்தார். இயற்கை மருத்துவ முறையில் உடல்நலம் காத்துக் கொண்டார்.

"ஓய்வு கொள்ளக் கிராமத்திற்குச் சென்ற நான், ஓயாமல் இரவும் பகலும் தமிழ் நூல்களைக் கற்றேன்" என்கிறார் மு. வ.

திருப்பத்துாருக்கு அண்மையில் 'கிறித்து குல ஆசிரமம்' என்ற அமைப்பு இன்றும் உளது. அது மருத்துவச்சாலையாகவும் அமைந்து ஏழை எளியோர்க்கு மருத்துவத் தொண்டு ஆற்றிவந்தது. டாக்டர் ஏசுதாசன் என்ற பெரியவர் தாய்மொழிப் பற்றுமிக்கவர். அவருடன் ஸ்காத்லாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் பேட்ரன் என்பவரும் பணியாற்றி வந்தார். தமிழ் மொழியினைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/123&oldid=1462059" இலிருந்து மீள்விக்கப்பட்டது