பக்கம்:அறவோர் மு. வ.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

121

கற்க உளங்கொண்ட மருத்துவமனைப் பெரியவர்கள் பலர் மு. வரதராசனாரின் உதவியை நாடினர். ‘தீனபந்து ஆண்ட்ரூஸ்’ அவர்கள் அண்ணல் காந்தியடிகளாரிடம் பயின்றவர். அவரும் அவ் ஆசிரமத்திற்கு வந்திருந்தார். அவரோடு பழகிய காரணத்தால் மு. வ. அவர்கள் காந்தியப் பற்றும், சமயப் பொறுமையும், பிறருக்கு உழைக்கும் பெருமனமும் கைவரப்பெற்றார்.

கடுமையாக உழைத்துத் தம்மைச் சார்ந்த பிறரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கருத்துக் கொண்டிருந்த மு. வ. அவர்கள் தாமே பயின்று சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வில் 1935 ஆம் ஆண்டில் முதலாமவராக வந்து திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சுவாமிநாத தம்பிரானவர்களின் ஆயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றார். 1939 ஆம் ஆண்டில் புகழ் பூத்த கல்வியாளர் டாக்டர் ஏ. எல். முதலியார் ஆதரவு காரணமாகச் சென்னைப் பச்சையப்பர் கல்லூரியில் தமிழ் திருத்தாளராகப் பணியமர்த்தம் பெற்றார்.

மு. வ. பிறவி ஆசிரியர். மாணவர் மனத்தில் பசுமரத் தாணியெனப் பதியும் வண்ணம் பாடம் நடத்துதலில் வல்லவர். இருபத்தெட்டே நிறைந்த அகவையில் கல்லூரியிற் கால் வைத்துப் பயிலாத அவர், தாமே முயன்று படித்துத் தகுதியுடன் தேறிக் கல்லூரியில் - அதுவும் தமிழிற்கே அந்நாளில் முடிமணியாக விளங்கிய வகுப்பான பீ. ஒ. எல். ஆனர்ஸ் வகுப்பில் அவர் மாணாக்கர்க்குத் தமிழ் கற்றுக் கொடுத்த திறத்தினை அவருடைய முதலணி மாணவர் ஒருவரே மனந்திறந்து குறிப்பிட்டிருக்கக் காணலாம்.

"கழுத்துவரை மூடிய நீண்ட கோட்டு, வெள்ளைத் தலைப்பாகை, நெற்றியில் சத்தனப் பொட்டு ஆகிய கோலத்துடன் மு. வ. அவர்கள் எங்கள் வகுப்பிற்குள் முதன் முதலாக 1940 ஆம் ஆண்டு சூன் மாதம் நுழைந்தார். அவர் தோற்றப் பொலிவும், முகத்தில் தவழ்ந்த இனிமையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/124&oldid=1462060" இலிருந்து மீள்விக்கப்பட்டது