பக்கம்:அறவோர் மு. வ.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

அறவோர் மு. வ.


"அன்புக்காக விட்டுக் கொடுத்து இணங்கிநட; உரிமைக்காகப் போராடிக் காலங் கழிக்காதே.”

-இது 'தங்கைக்கு' நூல் வழி, பெண்ணுலகிற்கு விடுத்த செய்தி.

“விரும்பியது கிடைக்கவில்லையென்றால், கிடைத்ததை விரும்பவேண்டும்".

இஃது எல்லார்க்கும் விடுத்த செய்தி.

அரசு, நம்பி, பாரி என்று தூய தமிழ்ப் பெயர்களையே தம் பிள்ளைகளுக்கு இட்ட மு. வ. ஒரு தமிழர்.

தமிழின் துறைதோறும் துறைதோறும் சென்ற நூல்கள் பலவற்றைப் படைத்த மு.வ. ஒரு கலைஞர்.

தமிழ்ச் சமுதாயவுணர்விற்கே முதலிடம் தந்து வாழ்ந்த மு.வ. ஒரு சான்றோர்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/131&oldid=1238996" இலிருந்து மீள்விக்கப்பட்டது