பக்கம்:அறவோர் மு. வ.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

131

களும் மு.வ. அவர்களும் அருகருகே அமர்ந்திருந்தர். தாம் பேச உடன்படும்கூட்டத்திற்கெல்லாம் 200 ரூபாய் அன்பளிப்புப் பெற்று, அவ் அன்ளிப்பாலும் பிற செல்வர் களின் நன்கொடையாலும் செனாய் நகரில் திரு. வி. க. உயர்நிலைப் பள்ளியினை உருவாக்கி மு.வ. பள்ளி நிர்வாகி யாகி இருந்து அப்பள்ளியை நடத்தி வரும் காலம், எனவே தம் அருகே அமர்ந்திருக்கும் வாசன் அவர்களிடம் அப் பள்ளிக்கு நிதி கேட்டார்கள் அப்போது வாசன் அவர்கள் ஒன்றும் மறுமொழி கூறவிவல்லை. தம் வீட்டிற்குச் சென்று மு. வ. அவர்களைத் தம் வீட்டிற்கு வரவழைத்து ரூ. 5000/- நன்கொடை வழங்கியதோடு மு.வ. அவர்கள் ஆனந்த விகடனில் தொடர்ந்து எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். அப்போது ஆனந்த விகடனில் வெளியான கட்டுரைகளே பின்னாளில் 'கல்வி’ என்ற நூலாக வெளிவந்தது’ பின்னர்ப் பட அதிபர் ஏ. வி. மெய்யப்பன் அவர்களும், 5000. தந்தார்கள். மு. வ. அவர்களின் பெற்றமம் படமாக வெளிவந்தது. அந்நாளில் மு. வ. அவர்களை யார் அணுகினும், அவர் களிடம் திரு. வி. க. உயர்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக் கெனவே பேசி, நன்கொடை பெற்று அப்பள்ளியினை நன்னிலைக்குக் கொண்டுவந்த திறத்தினை ஈண்டு நினைத்துப் பார்க்கிறேன். நான் எம்.ஏ தேறிய நிலையில் கல்லூரிப் பணி கிடைக்காதோ என்றிருந்த நேரத்தில் .நீ வீட்டி லிருந்து நேராகத் திரு. வி. க. உயர்நிலைப் பள்ளிக்கு வந்து விடு. அங்கேயே வேலைக்கான ஆர்டர் தெருகிறேன். நாளையே வேலையில் சேர்ந்து விடலாம்’ என்ற மு. வ. அவர்களை நினைத்துப் பார்க்கிறேன்.

ஒரு திருமண விருந்திற்கு போய் மு. வ. அவர்கள் பேராசிரியர் அ.மு.ப.அவர்கள் பச்சையப்பர் கல்லூரி உதவி மேலாளர் திரு. வீ. பாஷ்ய ராமானுஜம், நான் ஆகிய நால்வரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.அப்பொழுது சித்தாரிப் பேட்டையில் ஒரு வீட்டில் நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/134&oldid=1224205" இலிருந்து மீள்விக்கப்பட்டது