பக்கம்:அறவோர் மு. வ.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136 அறவோர் மு. வ.

பதினாறு வயது முடிந்த நிலையில் அரசாங்கப் பணியினை ஏற்றார். திருப்பத்துார் தாலுக்கா அலுவலகத்தில் வரி வருவாய்த் துறையில் எழுத்தரானார். பின்னர் ’ஆப்காரி’த்துறை எழுத்தரானார். அந்தத் துறையில் அக்காலத்தில் லஞ்ச நடமாட்டம் உண்டு. ஆனால் அந்தத் தீமைக்குச் சற்றேனும் ஆளாகாத இவர்கள், கடமையுணர்வோடு பணிகளைத் திறம்பட ஆற்றிய காரணத்தினால் வேலைப்பளு மிகுதியாகத் தரப்பட்ட நிலையில் மூன்றாண்டுகளில் உடல்நலம் குன்றி இரத்த வாந்தி எடுத்துத் தம் பணியினை ராஜினாமா செய்துவிட்டுத் தம் சொந்த ஊரான வேலத்திற்குத் திரும்பினார்.



இவருக்கு இளமை நண்பர்கள் நால்வர் சிறப்பானவர்கள். ஒருவர் மளிகைக்கடை தாமோதர முதலியார், இரண்டாமவர் மண்டிக்கடைக் கணக்கர் குப்புசாமி முதலியார்: மூன்றாமவர் கவிநயம் கந்தசாமி முதலியார்; நான்காமவர் வேலூர் ஊரீசு கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்ற யோகசுந்தரம் ஆவர். இவர்களில் முதலாமவர் தாமோதர முதலியார் முதலில் காலமாகி விட்டார். மற்ற நண்பர்கள் மதுரையில் டாக்டர் மு. வ. அவர்கள் துணைவேந்தராக இருந்தபோது அங்குச் சென்று பத்து நாட்கள் தங்கியிருந்து, பள்ளிக்கூட இளமை நாட்களை நினைவு கூர்ந்து, அந்தக் காலத்திற்கே போய்விட்டவர்களைப் போல் வாழ்ந்தார்கள். தம் நண்பர்களிடம் பிரியாவிடை பெற்ற மு. வ. அவர்தம் குடும்பத்தினர்க்கும் வேட்டி, புடவை, பெட்டி, பை முதலான அன்பளிப்புகளை வழங்கி. பேருந்து வண்டி நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்தார். ’பஸ்’ஸில் அமர்ந்ததும் நண்பர்கள் நீங்கள், துணைவேந்தர்; வேலை பல இருக்கும்; போய் வாருங்கள்’ என்று கூற, மு. வ. அவர்கள் சிரித்துக்கொண்டே, ’நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/139&oldid=1462061" இலிருந்து மீள்விக்கப்பட்டது