பக்கம்:அறவோர் மு. வ.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

11


படுத்த முயலும் தாயின் முயற்சி போன்ற வீண் கனவுதான்"
- நண்பர்க்கு .பக். 102

என்பது அவர் உணர்ந்து தெளிந்த உண்மை.

“கருத்துகள் ஆற்றல் மிக்கவை. உண்மையும் ஆழ்ந்த உணர்வும் கூடிப் பிறந்த கருத்துக்கள் உலகத்தின் போக்கையே மாற்றி அமைக்கக் கூடியவை"
- உலகப் பேரேடு, பக். 153

என்பது மு.வ. அவர்களின் எண்ணம். எனவே தான் தாம் உணர்த்த விரும்பிய அறங்கள் கருத்துகளாகவே-எண்ணங்களாகவே கூறிச் செல்கின்றார். இந்த எண்ணங்கள் உலகையே மாற்றி அமைக்கும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை மற்றோர் இடத்திலும் குறிக்கின்றார்.

"மனத்தால் எண்ணும் எண்ணம் ஆற்றல் உடையது. பலர் சேர்ந்து எண்ணும் எண்ணங்களே உலகை மாற்றி அமைக்கும் வல்லமை உடையவை."

'எண்ணம் திருந்தினால் எல்லாம் திருந்தும்' என்ற கருத்துடைய மு.வ. அவர்கள் இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள் செயலாக ஆக்கம் பெறும் என்று மொழிகின்றார்.

"உண்மையான எண்ணமும் உள்ளம் கலந்த பேச்சும் சேர்ந்தால் உருப்படியான செயல் ஆவது திண்ணம்". "நம்மால் உடனே மாற்றியமைக்க முடியாமற் போகலாம். மாற்றியமைக்க வேண்டும் என்று எண்ணுவது நம்மால் ஆகும். திட்பமாக எண்ணிப் பிறர்க்கும் உணர்த்த முடிந்தால் அதுவே பெரிது தான். இன்று எண்ணத்தை வெற்றியுடன் பரப்பிவிட்டால் நாளை அது செயலாக உருக்கொள்வது திண்ணம். விதைத்த விதை முளைக்கத் தவறினாலும் தவறும். பெரும் பாலோர் எண்ணும் எண்ணம் செயல் ஆகத் தவறாது."
- நண்பர்க்கு . பக். 26
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/14&oldid=1237227" இலிருந்து மீள்விக்கப்பட்டது