பக்கம்:அறவோர் மு. வ.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 137

வீட்டிற்குப் போய் விட்டால் நீங்கள் ஒருவேளை பேருந்து வண்டியை விட்டு என் பின்னாலேயே வீட்டிற்கு வந்து விடுவீர்கள். எனவே நான் உங்களை இருந்து ஏற்றி விட்டுச் செல்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே கேலி பேசினாராம், நண்பர்கள் சூழலில் குழந்தையாகிவிடும் மனத்தை இவரிடம் காணலாம்.



1931ஆம் ஆண்டில் வேலூர் நண்பர் திரு. யோக சுந்தரம் அவர்கள் மூலம் எல்லா நோய்களுக்கும் மருந்து’ எனும் அரிய இயற்கை மருத்துவ நூலை மு. வ. அவர்கள் கண்டார்கள். அந்நூல் இவர் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. பதினாறு வயதில் தொடங்கிய இயற்கை மருத்துவம் இவர் வாழ்நாள் இறுதிவரை நாற்பத்தாறு ஆண்டுகள் தொடர்ந்தது. தம் மக்கள் அரசும், நம்பியும், பாரியும் மருத்துவத்துறை உயர் பட்டங்கள் பெற்று, மருத்துவத்துறையில் உயர்ந்து நிற்கும் நிலையிலும் அலோபதி என்னும் ஆங்கில மருத்துவ முறையில் இறுதிவரை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தார். தம் உடம்பிற்கு இயற்கை மருத்துவமே ஒத்துவரும் என்று உறுதியாக நம்பினார். அக்கூற்று எத்துணையளவு உண்மை என்பது அவர் இறுதிநாட்களில் 9.10.74 அன்று நேரடியாக விளங்கியது.



அரசியலில் காந்தியடிகள்பால் ஈடுபாடு கொண்டவர். கட்சி அரசியலை விரும்பாதவர். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய சர்வோதயத் தலைவர் செயப்பிரகாசர் அவர்களே இவருடைய ’அறமும் அரசியலும்’ எனும் நூற் கருத்துகளை இவரை மேடையில் வைத்துக்கொண்டே பாராட்டியிருக்கிறார். காந்தியத்தில் அழுத்தமான பற்றுடையவர் இவர்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/140&oldid=1462062" இலிருந்து மீள்விக்கப்பட்டது