பக்கம்:அறவோர் மு. வ.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

139

உணர்ந்த அக்காலத்தில் அவ்வூரில் அரசியல் செல்வாக்கும் பணச்செல்வாக்கும் பெற்றிருந்த 'ஆப்காரி கான்டிராக்டர்’ நாயுடு அவர்கள் முயற்சியால் இப்பணி இவருக்கு வாய்த்தது. இருபத்திரண்டு வயதில் தமிழாசிரியர் பணி தொடங்கினார் மு. வ.



1935 ஆம் ஆண்டு இவர் வாழ்வில் முக்கியமான ஆண்டு. இவ்வாண்டில் 'வித்துவான்-நிறைவிலை' (Final)த் தேர்வில் மாநிலத்திலேயே முதலாமவராக வந்து, திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றார். இவர் இத்தேர்வு எழுதுவதற்கு இரண்டு திங்களுக்கு முன்தான் 1935 பிப்ரவரியில் தைத்திங்களில்தான் இவர் தம் உறவுப்பெண் மாமன் மகளார் - நாங்கள் வணக்கத்தோடு போற்றும் இராதா அம்மாவைத் திருமணம் செய்து கொண்டார்கள்.



திருமணத்திற்கு மாமனார் மாப்பிள்ளை உடைக்கென்று ஐம்பது ரூபாய் தர, முப்பது ரூபாயில் வேட்டி, சட்டை, மேல் துண்டு எடுத்துக்கொண்டு, மீதிப்பணத்தை மாமனாரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். திருமணம் வேலத்தில் நடந்தது. மருமகப்பிள்ளையிடம் மாமனாருக்குப் பேரன்பு. பின்னாளில் இவ்வன்பு இருவரிடையிலும் பெரிதும் வளர்ந்தது. மருமகப்பிள்ளை எழுத்துப் பணிக்குத் தடங்கல் வரக்கூடாது என்று, மருமகப்பிள்ளை வீட்டிற்கு வேண்டிய பொருள்களை வாங்கி வந்து போட்டு மு. வ. அவர்களின் குடும்பப் பொறுப்பினைக் குறைத்தவர் மாமனார். இவர் மாமனார் மெச்சிய மருகர். மருகரும் மாமனாரைப் பாராட்டிப் பலமுறை என்னிடம் பேசியிருக்கிறார்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/142&oldid=1239006" இலிருந்து மீள்விக்கப்பட்டது