பக்கம்:அறவோர் மு. வ.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

அறவோர் மு. வ.

இருபது வயதில் தொடங்கிய காந்தியப் பற்று அப்பா அவர்களின் இறுதிநாள் வரை நிலைத்து நின்றது. நான்கு முழக் கதர் வேட்டியும், கைத்தறி வேட்டியுமே விரும்பி யணிவார். தலைமை சான்ற சிலர் வற்புறுத்தல் காரணமாக ஒரு சில காலமே வேறு உடை அப்பா அவர்கள் வாழ்வில் இடம் பெற்றிருந்தாலும், கல்லூரி நாட்களில் கீழே 'பி அன்ட் சி' (B & C) மில் வெள்ளை 'பேண்ட்'டும் (Pant), மேலே கதர்க்கோட்டும் அவர் உடைகளாக விளங்கின.

1961ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதல் நாள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் - பேராசிரியர் பணியேற்ற பின் பெரும்பாலும் அவர் கீழ் உடை கருநிறம் வாய்ந்த மில் துணி 'பேண்ட் ' ஆகவும், மேலே கதர் முழுக்கை 'ஸ்லாக்' (Slack) ஆகவும் இருந்தது. அகாடெமிக் கவுன்சில், செனேட் முதலிய சில முக்கியமான கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது கோட் அணிவார். 'கோட்' ஒன்று எப்போதும் அலுவலக "நிலைப்பேழை” (பீரோவில்) இருக்கும்.

தம்மை ஆளாக்கிய பச்சையப்பர் கல்லூரியினை இவர் என்றும் மறந்ததில்லை. “பச்சையப்பர்". என்ற நூலும், பிற்காலத்தில் பச்சையப்பர் கல்லூரி வழியாகப் போகும் போதெல்லாம், கையால் வணங்கி விட்டு, நெஞ்சால் நினைந்து செல்லும் போக்கு இவர் நன்றியுணர்ச்சியினை நன்கு காட்டும்.



அப்பா எழுதிய நூல்கள் பல திறத்தன. நாவல், சிறு கதை, குழந்தை இலக்கியம், மொழிநூல், இலக்கிய ஆராய்ச்சி, கடிதங்கள் என்று பல துறை நூல்களை எழுதி யுள்ளார்கள். தொடக்கக் கால நூல்கள் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், பாவை, செந்தாமரை முதலியனவாகும். 'செந்தாமரை’க்கு முதலில் இட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/147&oldid=1239013" இலிருந்து மீள்விக்கப்பட்டது