பக்கம்:அறவோர் மு. வ.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

145

பெயர் ‘முருங்கை மரம்’ என்பதாகும். பி. ஒ. எல். (ஆனர்ஸ்) முதல் அணி மாணவர் பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி அவர்களே 'செந்தாமரை' என்ற தலைப்பினைத் தந்தார்.



மற்றொரு குறிப்பிடத்தக்க செய்தி, இவர்கள் அணிந்துரை பெற்றது திரு. வி. க. அவர்கள் ஒருவரிடம் மட்டுமே. 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ எனும் நூலிற்குப் பெற்றார். அந்நூலினைப் புரட்சி நூல் எனப் பாராட்டுவர் தமிழ்த்தென்றல் திரு. வி. க.

பி. ஒ. எல். (ஆனர்ஸ்) படித்த முதலணி மாணவர் நால்வர். அந்நால்வரும் இவர்தம் நான்கு நாவல்களுக்கு முன்னுரை - அறிமுகவுரை எழுதியுள்ளனர். 'அல்லி' க்குத் திரு. ம. ரா. போ. குருசாமி அவர்களும், கரித்துண்டுக்குத். திரு சி. வேங்கடசாமி அவர்களும், 'அகல்விளக்கு' திரு கா. அ. ச. ரகுநாயகன் அவர்களும், 'நெஞ்சில் ஒரு முள்'ளுக்குத் திரு. இரா. சீனிவாசன் அவர்களும் முன்னுரை எழுதியுள்ளனர். நூலிற்குப் பாயிரம் மாணவர் தரலாம். எனும் நன்னூல் உரை. அப்பா அவர்கள் மாணவர்க்குத். தந்த அரிய வாய்ப்பால் விளக்கம் பெற்றது.

எண்பதிற்கு மேலும் நூல்களை எழுதிக் குவித்த அப்பா அவர்கள், தொடக்க நாளில் அம்மா அவர்களின் நகைகளை அடகு வைத்தே நூல்களை வெளிக் கொணர்ந்தார்கள் என்பதனைப் பாரி நிலைய உரிமையாளர் சீர்சால் செல்லப்பா அவர்கள் கண்ணீருடன் நினைவு கூர்கிறார்கள்.

புதிதாக மணமான பலருக்கும் வழிகாட்டும் ஆண் பெண் மனப்போராட்டங்களை விளக்கி நிற்கும் 'கள்ளோ காவியமோ' அச்சிடப்பட முடியாமல் ஒரு பதிப்பகத்தில் பல நாள் முடங்கிக் கிடந்தது. பதிப்பாளர் ஆணை பெற்றுத் தாமே முயன்று தேடிக் கையெழுத்துப்படியைக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/148&oldid=1239014" இலிருந்து மீள்விக்கப்பட்டது